பொலித்தீன் தொழிற்சாலையில் தீ விபத்து - News View

About Us

About Us

Breaking

Thursday, January 31, 2019

பொலித்தீன் தொழிற்சாலையில் தீ விபத்து

ஜாஎல, ஏகல பிரதேசத்தில் பொலித்தீன் தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை 06.00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயினால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். 

தீயினால் நிறுவனத்தின் இயந்திர உபகரணங்கள் மற்றும் பொலித்தீன் பொருட்களுக்கு சேதம் எற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மின் ஒழுக்கு காரணமாகவே தீ சம்பவம் ஏற்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

கம்பஹா தீயணைப்பு படையினர் வருகை தந்து தீயை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment