இலங்கையின் குற்றவாளி பட்டியலில் 608 சிறுவர்களும், பாடசாலை மாணவர்களும் உள்ளடங்கியுள்ளதாக குற்றத்தடுப்பு பொலிஸ் தகவல் பிரிவு வெளிப்படுத்தியுள்ளது.
ஐ.ஆர்.சி என்ற பட்டியலில் கொலை, கொள்ளை, தாக்குதல்கள் மற்றும் பாலியல் துஸ்பிரயோகம் ஆகிய குற்றச்சாட்டுகள் அடங்கியுள்ளதுடன், இதில் இந்த சிறுவர்களும் உள்ளடங்கியுள்ளதாக குற்றத்தடுப்பு பொலிஸ் தகவல் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் இந்த பட்டியலில் 13 சிறுமிகளும் அடங்கியுள்ளதாகவும், ஒவ்வொரு வருடத்திலும் வெளியிடப்படும் இந்த பட்டியலில் மேலதிகமாக பாடசாலை மாணவர்கள் உட்பட 100 சிறுவர்கள் உள்ளடக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் 11 முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும், இந்த பிரிவினர் சைக்கிள், மடிக்கணினி, கணினி திருட்டு போன்ற குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன. இதேவேளை ஐ.ஆர்.சி பட்டியலில் 1200 பெண்கள் உட்பட்ட 43,000 பேர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
குழந்தைகள் குற்றங்களில் ஈடுபடுவதை தடுக்கும் முகமாக பொலிஸ் மா அதிபர் புஜித ஜயசுந்தர வழிகாட்டுதலின் கீழ் ஒரு சிறப்பு திட்டம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment