கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய நாளுக்கான மொத்த புரள்வு 68.77 மில்லியன் ரூபாயாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இன்றைய தினம் (04) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளின் பின்னர் இடம்பெற்றுள்ள அதி குறைந்த மொத்த புரள்வாக இது பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
கடந்த 2009ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் திகதி கொழும்பு பங்குச் சந்தையின் நாளுக்கான மொத்த புரள்வு 64.3 மில்லியன் ரூபாயாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment