பௌத்த அடியார்களின் மறைநூலாகக் கருதும் திரிபீடகம் தேசிய மரபுரமையாக பிரகடனம் செய்யப்படவுள்ளது.
இது தொடர்பான நிகழ்ச்சி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் மாத்தளை அளுவிஹாரையில் நாளை நடைபெறும். அஸ்கிரி மல்வத்தை பீடங்களின் மஹாநாயக்கர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் வகையில் நாட்டிலுள்ள சகல பௌத்த நிலையங்களிலும் அரச நிறுவனங்களிலும் வீடுகளிலும் பௌத்த கொடியை ஏற்றி கௌரவத்தை செலுத்துமாறு ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன தெரிவித்தார்.
அரச தகவல் திணைக்களம்
No comments:
Post a Comment