விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டு 06 பெண்கள் கைது - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 29, 2019

விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டு 06 பெண்கள் கைது

வெலிக்கட, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புத்கமுவ வீதியில் ராஜகிரிய ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்திச் செல்லப்பட்ட விபச்சார விடுதி ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 10.55 மணியளவில் இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது. 

வெலிக்கட பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் பெற்றுக்கொள்ளப்பட்ட தேடுதல் ஆணையின்படி இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது. 

விடுதியை நடத்திச் சென்ற முகாமையாளரும் மேலும் 06 பெண்களும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்கள் 32,23,24,25,27 மற்றும் 28 வயதுடையவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர். 

வவுனியா, ஹோகந்தர, மெதகம, பலாங்கொட, தனமல்வில, பொரள்ளை மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களெ சேர்ந்த பெண்களே கைதாகியுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், வெலிக்கட பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment