பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் புதிய அமைச்சரவைக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு - News View

About Us

About Us

Breaking

Monday, December 3, 2018

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் புதிய அமைச்சரவைக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் புதிய அமைச்சரவைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தற்போதைய அமைச்சரவைக்கு பதவியில் இருப்பதற்கு சட்டரீதியாக அனுமதியில்லை என்றும், அவர்களின் நியமனங்களை செல்லுபடியற்றதாக உத்தரவிடக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜுன ஓபேசேகர ஆகியோர் முன்னிலையில் இன்று இரண்டாவது நாளாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

அத்துடன், வழக்கின் பிரதிவாதிகளை மன்றில் ஆஜராகுமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அழைப்பாணை விடுத்துள்ளது.

இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிரான மனு மீண்டும் டிசம்பர் 12 ஆம் திகதி குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாக மேன் முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நாட்டில் அரசாங்கம் என்பது இல்லை எனவும், பிரதமர் மற்றும் அமைச்சர்கள் ஆகிய பதவிகள் என்பனவும் இல்லை என சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்திருந்ததோடு, அது பாராளுமன்ற ஹன்சார்ட் பதிவில் உள்ளடக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்கத்கது.

No comments:

Post a Comment