மழை அதிகரிக்கும் வாய்ப்பு - கிழக்கில் அடிக்கடி மழை - News View

About Us

About Us

Breaking

Saturday, December 1, 2018

மழை அதிகரிக்கும் வாய்ப்பு - கிழக்கில் அடிக்கடி மழை

ஞாயிற்றுக்கிழமை (02) இரவு முதல் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு அதிகளவில் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் அடிக்கடி மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் மத்திய, சப்ரகமுவ, மேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஏற்படலாம் என திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதேவேளை நாட்டின் மத்திய, சப்ரகமுவ, மேல் மாகாணங்களின் ஒரு சில பிரதேசங்களில் காலை வேளையில் பனிமூட்ட நிலை காணப்படலாம் என, திணைக்களம் அறிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை ஏற்படும் நிலையில், குறித்த பிரதேசத்தில் காற்றின் வேகம் தற்காலிகமாக அதிகரிக்கலாம் எனவும், மின்னல் தாக்கங்களில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment