ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சருமான ரவி கருணாநாயக்க கைது செய்யப்பட வேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்தன வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் அலுவலகத்தில் நேற்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் பந்துல குணவர்தன இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தம்பர அமில தேரர் உள்ளிட்ட 39 பேர் லிற்றோ எரிவாயு நிறுவனத்திடமிருந்து மாதாந்தம் பணம் பெற்று கொண்டுள்ளனர். இதற்கான உத்தரவினை அப்போதைய நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க பிறப்பித்துள்ளார்.
ரவி கருணாநாயக்கவை கைது செய்யுமாறு பாதுகாப்பு தரப்பினரிடம் கோருகின்றேன். அரச பணம் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு முதல் தம்பர அமில தேரருக்கு மாதாந்தம் 95,000 ரூபா பணம் லிற்றோ எரிவாயு நிறுவனத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.
இரகசிய கணக்கு ஒன்றின் ஊடாக இவ்வாறு 39 பேருக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. எனவே ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்“ என வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment