நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கல்கள் காரணமாக சாதாரண மக்களே பாதிக்கப்படுவதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (03) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேனவினால் இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள சிக்கலான நிலமை காரணமாக பொது மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உரம் மற்றும் எரிபொருள் விலையைக் குறைப்பதனால் இந்த சிக்கலுக்கான காரணத்தை கண்டறிய முடியாது எனவும் தற்போது நாட்டின் பொருளாதாரம் நூற்றுக்கு 50 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும், பெரும்பான்மை யாருக்கு உண்டு என்பதனை பாராளுமன்றத்தில் நிரூபித்துள்ளதாகவும், மீண்டும் நாட்டை சாதாரண நிலைக்கு கொண்டு செல்லும் பொறுப்பு ஜனாதிபதியிடமே உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்களுக்காக நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி, நாட்டின் எதிர்காலத்திற்காக உடனடியாக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment