புசல்லாவையில் நீரில் மூழ்கிய பாடசாலை மாணவரின் சடலம் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, December 1, 2018

புசல்லாவையில் நீரில் மூழ்கிய பாடசாலை மாணவரின் சடலம் மீட்பு

புசல்லாவை – சென் கிளயார் கீழ் பிரிவு பகுதியில் குளிக்கச்சென்று காணாமற்போன பாடசாலை மாணவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவர் ஏனைய மாணவர்கள் சிலருடன் நேற்று (30) மாலை குளிக்கச்சென்ற போது நீரில் மூழ்கி காணாமற்போயுள்ளார். மாணவரைத் தேடும் பணிகளில் பொலிஸார் மற்றும் கடற்படையினர் ஈடுபட்டதுடன், சடலம் இன்று முற்பகல் மீட்கப்பட்டுள்ளது.

கம்பளை பகுதியைச் சேர்ந்த ஜெயசங்கர் கணேஷ்வரன் எனும் 18 வயதான மாணவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புசல்லாவை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment