சர்வதேச லயன் கழக வலையமைப்பின் தலைவி ஜனாதிபதியுடன் சந்திப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, December 3, 2018

சர்வதேச லயன் கழக வலையமைப்பின் தலைவி ஜனாதிபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள உலகில் 206 நாடுகளில் சுமார் 14 இலட்சம் உறுப்பினர்களைக் கொண்டுள்ள சர்வதேச லயன் கழக வலையமைப்பின் தலைவி குட்ருன் யுங்வாடோடிர் (Gudrun Yngvadottir) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

குட்ருன் யுங்வாடோடிரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு நினைவு முத்திரை ஒன்றும் இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment