ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை, எதிர்வரும் 7ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு உயர் நீதிமன்றம் அறிவித்தல் பிறப்பித்துள்ளது
நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் விடயங்களை முன்வைப்பதற்காக அவருக்கு இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் மனுக்கள் மீதான விசாரணைக்காக நியமிக்கப்பட்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் தொடர்பில் தொலைக்காட்சி கலந்துரையாடலின்போது, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வௌியிட்டமை குறித்து ரஞ்சன் ராமநாயக்கவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பிரதம நீதியரசர் உயர் நீதிமன்றத்தின் தலைமை பதிவாளருக்கு அறிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் 7ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு சட்டமா அதிபருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஞ்சன் ராமநாயக்கவின் கருத்து அடங்கிய காணொளியை பிரதம நீதியரசர் தலைமையிலான நீதியரசர் குழாம் பரிசீலித்ததன் பின்னர் இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment