காலநிலை மாற்றம் மனித குலத்திற்கு அச்சுறுத்தல் – டேவிட் அட்டென்பொரோ - News View

About Us

About Us

Breaking

Monday, December 3, 2018

காலநிலை மாற்றம் மனித குலத்திற்கு அச்சுறுத்தல் – டேவிட் அட்டென்பொரோ

காலநிலை மாற்றம் மனித குலத்திற்கான மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குவதாக இயற்கையியலாளர் டேவிட் அட்டென்பொரோ (David Attenborough) தெரிவித்துள்ளார்.

இந்த அச்சுறுத்தல் ஆயிரம் ஆண்டுகளுக்கு தாக்கம் செலுத்தும் என்பதுடன், நாகரிகங்களின் வீழ்ச்சிக்கும் அழிவுகளுக்கும் காரணமாகலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐ.நா. அமைப்பின் அனுசரணையுடன் போலந்தில் நடைபெறும் காலநிலை தொடர்பான பேச்சுவார்த்தைகளின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வௌியிடுகையிலேயே, இயற்கையியலாளர் டேவிட் அட்டென்பொரோ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

2015 இல் பரிஸ் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதிலிருந்து ஏற்படும் மோசமான காலநிலை மாற்றங்கள் தொடர்பாக இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மனிதர்களால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய பேரழிவை உலகம் சந்தித்துள்ளதாகவும் இதுவே உலகில் தற்போது நிலவும் பாரிய அச்சுறுத்தல் எனவும் டேவிட் அட்டென்பொரோ சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இதற்கான தக்க நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளாதவிடத்து பாரிய பின்னடைவுகளை உலகம் சந்திக்க நேரிடும் என இயற்கை ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment