வவுனியா பழைய பேருந்து நிலையத்தை மீண்டும் திறக்க சத்தியலிங்கம் ஆளுனரிடம் கோரிக்கை - News View

About Us

About Us

Breaking

Saturday, December 1, 2018

வவுனியா பழைய பேருந்து நிலையத்தை மீண்டும் திறக்க சத்தியலிங்கம் ஆளுனரிடம் கோரிக்கை

முன்னாள் முதலமைச்சரும் அப்போதைய போக்குவரத்து அமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் அவர்களின் உத்தரவுக்கு அமைய வவனியா நகரில் அமைந்துள்ள பழைய பேருந்து நிலையம் கடந்த வருடம் இழுத்து மூடப்பட்டது. இதனால் அங்கு அமைந்துள்ள 137 வியாபார நிலையங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் கடந்த மாதம் 31ம் திகதி வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல் குரேயை சந்தித்த வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் மீண்டும் பழைய பேருந்து நிலையத்தை மீளத்திறக்க நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை முன்வைத்திருந்தார்.

இந்த நிலையில் 26.11.20108 மீண்டும் ஆளுனருக்கு கோரிக்கை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment