அணைக்கட்டுக்குள் பாம்புகள் முட்டையிடும் அக்கட்டு எங்களுக்குத் தேவையில்லை மக்கள் கோரிக்கை - News View

About Us

About Us

Breaking

Monday, December 3, 2018

அணைக்கட்டுக்குள் பாம்புகள் முட்டையிடும் அக்கட்டு எங்களுக்குத் தேவையில்லை மக்கள் கோரிக்கை

மட்டு மாவட்டத்தின், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மீராவோடை மேற்கு 5 ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள ஆற்றங்கரைக்கு மண்ணரிப்பை தடுக்கும் தடுப்புச் சுவரை அமைப்பதற்காக முன்னாள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்கள் இருபது இலட்சம் ரூபாய் நிதி ஒதிக்கீடு செய்திருந்தார். அவ் வேலைத்திட்டத்தை செய்வதற்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வு (01) சனிக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார். அடிக்கல்லை நாட்டி வைத்ததன் பின்னர் அப் பகுதியைச் சேர்ந்த சிலர் கற்கலை அடுக்கும் முறையிலான இவ் அணைக்கட்டு எங்களுக்குத் தேவையில்லை அதனுல் பாம்புகள் குடியிருந்து முட்டைகள் இடும் இதனால் பாம்பின் பெருக்கம் அதிகரிக்கும் என்று எங்களுக்கு பலர் தெரிவித்துள்ளனர் இதனால் எங்களுக்குப் பயமாகவுள்ளது எனவே அதற்கு மாற்றமாக கற்கலால் கட்டப்பட்டு சீமெந்து போடப்பட்ட அணைக்கட்டுதான் எங்களுக்கு வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதன் போது அப் பகுதியிலுள்ள வேறுசிலர் எங்களுக்கு எந்த அமைப்பிலான அணைக்கட்டு வந்தாலும் பராவாயில்லை பாம்புகள் குடியிருப்பது என்பது தவறான கருத்தாகவுள்ளது எனவே அடிக்கல் நாட்டி வைத்த அணைக்கட்டை எங்களது குடியிருப்புக்கள் பாதுகாப்பாக அமைவதற்கு அதனை அமைத்துத் தாருங்கள் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இவ் விடயங்களைக் கவனத்திற் கொண்ட தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி இது தொடர்பில் கூடுதல் கமனமெடுத்து இவ் இரு தரப்பினர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு பெற்றுத் தருவதாக கூறியமை குறிப்பிடத்தக்கது.

எச்.எம்.எம்.பர்ஸான்

No comments:

Post a Comment