உலகம் முழுவதும் மீண்டும் சின்னம்மை நோயின் தாக்கம் அதிகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, November 30, 2018

உலகம் முழுவதும் மீண்டும் சின்னம்மை நோயின் தாக்கம் அதிகரிப்பு

உலகம் முழுவதும் மீண்டும் சின்னம்மை நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. 2017 ஆம் ஆண்டில் சின்னம்மை நோய் தொற்றியவர்களின் எண்ணிக்கை 30 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

இந்தக் காலப்பகுதியில் 67 இலட்சம் பேருக்கு சின்னம்மை நோய் தொற்றியிருந்தது. இவர்களில் பெரும்பாலானோர் இளம் பிள்ளைகள் ஆவார். நோய் தாக்கி ஒரு இலட்சத்திற்கும் மேலானோர் பலியாகி இருந்தனர். 

சின்னம்மை நோயை முற்றாக இல்லாதொழிக்கும் முயற்சியில் முன்னேற்றம் தென்பட்டாலும் இந்த முன்னேற்றம் கடந்தாண்டு பின்னோக்கி திரும்பியிருப்பதாக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. தடுப்பு மருந்தேற்றலில் நிலவும் குறைபாடுகள் இதற்கு காரணமாகும் என்றும் ஸ்தாபனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment