சீனக்குடா மாபள் பீச்சில் இளைஞர்கள் இருவர் பலி - News View

About Us

About Us

Breaking

Friday, November 30, 2018

சீனக்குடா மாபள் பீச்சில் இளைஞர்கள் இருவர் பலி

திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாபள் பீச் பகுதியில் நீராடச் சென்ற இளைஞர்கள் இருவர் நேற்று (30) பிற்பகல் 3.00 மணியளவில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்வாறு உயிரிழந்த இளைஞர்கள் கலகெதர, மடவல, தெல்கஸ்யாய பகுதியைச் சேர்ந்த எச். சந்தரு பண்டார (13வயது) மற்றும் கலகெதர, மடவத்த, பகலவத்த பகுதியைச் சேர்ந்த நித்ஸர நிம்ஸான் ராஜபக்ஷ (17 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது சீனக்குடா விமானப் படை முகாமில் நேற்று முன்தினம் 29 ஆம் திகதி இரவு விமானப் படை வீரர்களின் கலை நிகழ்வொன்று நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்விற்கு குடும்பத்தாருடன் இந் நிகழ்விற்கு வருகை தந்திருந்த வேளை நேற்று சீனக்குடா மாபள் பீச் கடற்கரைக்கு குளிப்பதற்காக சென்ற போது நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிண்ணியா தள வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment