மக்கள் ஆதரவில் ரஜினியை முந்திக் கொண்ட கமல் - News View

About Us

About Us

Breaking

Friday, November 2, 2018

மக்கள் ஆதரவில் ரஜினியை முந்திக் கொண்ட கமல்

ஜெயலலிதாவின் இடத்தை மக்கள் நீதி மையம் கட்சியின் தலைாவர் கமல்ஹாசன் நிரப்புவார் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசியலில் நாள்தோறும் ஒரு கட்சிகள் முளைக்கின்றன. இதில் பெரும்பாலானவை நடிகர்களின் கட்சிகளாகும். கமல் கட்சி தொடங்கி விட்டார். விஜய் தொடங்கும் முடிவில் இருக்கிறார், சிம்பும் திட்டத்தில் இருக்கிறார்.

ஆனால் ரஜினிகாந்த் கட்சியை தொடங்குவது குறித்து எந்த ஒரு முடிவையும் இதுவரை எடுக்காமல் இருக்கிறார்.

அரசியலுக்கு வருகிறேன் என்று அவர் சொன்ன போது தமிழகத்தில் உள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்ப நான் வருகிறேன் என்றார் ரஜினி.இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த முதல்வர் யாரென்ற கணிப்பீட்டை 'இந்தியா ருடே' எடுத்தது. அதில் ஸ்டாலின்தான் என 41 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

இந்நிலையில் மக்களால் பெரிதும் போற்றுதலுக்குரிய நபரான ரஜினிகாந்தை கமல்ஹாசன் முந்தியுள்ளார்.ரஜினிகாந்த் முதல்வராக வர வேண்டும் என 7 சதவீத மக்கள் விரும்பியுள்ளனர். ஆனால் கமல்ஹாசன் முதல்வராக வர வேண்டும் என 8 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

7க்கும் 8-க்கும் பெரிதும் வித்தியாசம் இல்லை என பார்க்கப்பட்டதாலும் ரஜினியின் அரசியல் கொள்கைகளையும் கமலின் அரசியல் கொள்கையையும் மக்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர் என்பதையே காட்டுகிறது.

எப்போதும் தனது நிலைப்பாட்டில் உறுதியில்லாதவர் ரஜினிகாந்த் என மக்களால் அறியப்படுகிறார். ஆனால் கமல்ஹாசனோ கட்சியை தொடங்கி விட்டு சும்மா இருக்காமல் பல்வேறு ஊர்களுக்கும் சென்று மக்கள் பிரச்சினைகளை ஆராய்ந்து வருகிறார். தம் கட்சி வெற்றி பெறுமா என்று பாராமல் தம்மால் மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்று கமல் பார்க்கிறார்.ஆனால் ரஜினியோ ரசிகர்கள் என்ற குறுகிய வட்டத்திற்குள் இருக்கிறார்.

இவரது பேச்சால் மக்களும் குழப்பத்தில் உள்ளனர். எனவேதான் ரஜினிகாந்த் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் இடத்தை கமல் நிரப்புவார் என்று கூறப்படுகிறது. அதேவேளையில் தி.மு.கவில் கருணாநிதியால் வெற்றிடம் என்று இருந்தாலும் அதை ஸ்டாலின் நிரப்புவார் என்று அரசியல் நோக்காளர்கள் கருத்துக் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment