பழங்குடியின மக்களை புறக்கணித்த பா.ஜ.க - News View

About Us

About Us

Breaking

Friday, November 2, 2018

பழங்குடியின மக்களை புறக்கணித்த பா.ஜ.க

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உலகின் உயரமான சிலையான சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலை நேற்றுமுன்தினம் (31) பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

'ஒற்றுமைக்கான சிலை' (Statue of Unity) என்று அழைக்கப்படும் அந்த 182 மீற்றர் உயர சிலை, குஜராத்தின் சர்தார் சரோவர் அணைக்கு அருகில் அமைந்துள்ளது.

சிலைக்கு எதிராக அந்தப் பகுதியை சேர்ந்த பழங்குடி இனமக்கள் பலர் எதிர்ப்புகளை தெரிவித்து வந்த நிலையில், நேற்றுமுன்தினம் பிரம்மாண்ட விழாவில் பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். உலகின் மிக உயரமான இந்த சிலை 3000 கோடி ரூபா செலவில் கட்டமைக்கப்பட்டது.

இந்திய சுதந்திரத்துக்கு பின்னர் சண்டையிட்டுக் கொண்டிருந்த மாநிலங்களை ஒன்றிணைத்தமைக்காக சர்தார் படேலுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கட்டப்பட்டுள்ளது இந்த சிலை.

படேலின் இந்த வெண்கல சிலை அமைக்கும் பணி 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மேலும், இது பிரதமர் மோடிக்கு மிக நெருக்கமான திட்டமாக பார்க்கப்படுகிறது. பிரம்மாண்ட திறப்பு விழாவுக்கு எதிராக போராடிய 90 பேரை பொலிஸார் தடுத்து வைத்துள்ளனர். அவர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளனர் என்பது உடனடியாகத் தெரியவில்லை.

இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராக சர்தார் வல்லபாய் பட்டேல் பணியாற்றியிருந்தார்.

சிலை அமைந்துள்ள பகுதியை சுற்றியுள்ள 90 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பழங்குடியின தலைவர் ஆனந்த் மஸ்கயோன்கர் தெரிவிக்கிறார்.

இந்த சிலை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியைச் சேர்ந்த பழங்குடியினர் முழு கடை அடைப்புக்கு அறிவிப்பு விடுத்திருந்தனர். அம்பாஜி முதல் உமர்கம் என்ற கிராமங்கள் அந்த கடையடைப்பில் பங்கேற்றன. சிலை உள்ள பகுதியைச் சேர்ந்த மக்கள் சிலையின் கட்டுமானத்திற்கு நீண்ட காலத்திற்கு முன்பாக இருந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மத்திய குஜராத்தைச் சேர்ந்த சோட்டா உதய்பூ, பஞ்மஹால், வதோதரா மற்றும் நர்மதா ஆகிய பகுதிகள் நீரில் மூழ்கி விடுமென அவர்கள் அச்சுறுத்தினர்.

இந்த சிலையின் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்ட பணத்தை பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம் என பழங்குடியின மக்கள் தெரிவிக்கின்றனர்.

அந்த சிலையை சுற்றியுள்ள 22 கிராமத்தின் உள்ள பழங்குடியினர் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றையும் எழுதினர். அதில் சிலையை திறக்க வரும்போது மோடிக்கு தாங்கள் வரவேற்பளிக்க மாட்டோம் என்றும் தெரிவித்திருந்தனர்.

சர்தார் பட்டேல் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இருவரும் குஜராத்தில் பிறந்தவர்கள். தனது வலுவான பின்புலத்தை காண்பிக்க, மோடிக்கு நன்கு அறிந்த முகம் ஒன்று வேண்டும். அந்த முகம்தான் சர்தார் பட்டேல். ஏனெனில் குஜராத் மக்களின் மனதில் அவரது முகம் நன்கு அறியப்பட்டது.

இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்ட பட்டேல், கடினமாக முடிவுகள் எடுப்பதற்கும் நல்லாட்சிக்கும் அறியப்பட்டவர். சர்தார் பட்டேலின் குணங்கள் தனக்கும் உள்ளதாக மோடி காட்டிக் கொள்ள வேண்டும்.

2006ஆம் ஆண்டிற்குப் பிறகே, தனது பேச்சுகளில் மோடி, பட்டேல் குறித்து பேச ஆரம்பித்தார். அதற்கு முன்னதாக பெரிதாகப் பேசியதில்லை.

சர்தார் பட்டேலுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக நேருவின் குடும்பத்தை விமர்சிக்கத் தொடங்கினார் மோடி. இதனை பெரிய விஷயமாக்கி, நேருவுக்கும் பட்டேலுக்கு இடையே சண்டை இருந்ததாக, பட்டேலுக்கு போதிய மரியாதை அளிக்கப்படவில்லை என்றும் மோடி பரப்புரை ஆற்றினார்.

குஜராத்திற்கு காங்கிரஸ் அநீதி இழைத்து விட்டது என்பதை பரப்ப சர்தார் பட்டேலின் பெயரை அவர் பயன்படுத்தினார்.

சர்தார் பட்டேல் இந்து மதத்தைப் பின்பற்றினார். அதே போலதான் மோடியும். முஸ்லிம்களுக்கு எதிராக பட்டேலுக்கு காழ்ப்புணர்ச்சி இருந்தாலும், அவர் இந்துத்தவாவையோ அல்லது இந்து ராஷ்டிரா மீதோ நம்பிக்கை வைத்ததில்லை. முஸ்லிம்களையும் சமமான குடிமக்களாகவே பட்டேல் கருதினார். மதத்தின் பெயரில் மக்களை பிரிப்பதற்கு அவர் என்றுமே துணை நின்றதில்லை.

மிகப்பெரிய சர்தார் பட்டேலின் சிலையை நிறுவ 3000 கோடி ரூபாய் செலவழித்திருக்கிறார் பிரதமர் மோடி. ஆனால், உள்ளூர் விவசாயிகளுக்கும் பழங்குடி மக்களுக்கும் இதனால் எந்த பலனும் இல்லை. 

இந்தப் பகுதியில் நீர்ப்பாசன வசதிகள் இல்லை. பழங்குடி மக்களின் நிலம் தொடர்பாக தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் உள்ளன. இதையெல்லாம் தீர்க்க எந்த நடவடிக்கைகளையும் அவர் எடுக்கவில்லை. இந்த பெரிய பட்டேல் சிலை அமைந்துள்ள இடத்தினால், விவசாயிகள் பலர் தங்கள் நிலங்களை இழந்துள்ளனர்.

சர்தார் பட்டேலின் உயர்ந்த நிலைக்கு சமமாக தன் பெயரையும் வைத்து, வரும் தலைமுறையினர் பட்டேலை குறிப்பிடும் போது இவரையும் குறிப்பிட வேண்டும் என்று மோடி நினைக்கிறார்.

(ஹிந்து)

இதனுடன் தொடர்புடைய செய்தியினை பார்வையிட
https://www.newsview.lk/2018/10/blog-post_8893.html

No comments:

Post a Comment