மகசின் சிறைச்சாலையிலிருந்து வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார் பாதுகாப்பு படைகளின் பிரதானி! - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 28, 2018

மகசின் சிறைச்சாலையிலிருந்து வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார் பாதுகாப்பு படைகளின் பிரதானி!

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன, கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரத்தில் நேற்று கைது செய்யப்பட்ட அவர், கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். 

எதிர்வரும் டிசம்பர் மாதம் 5ஆம் திகதி வரை அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (வியாழக்கிழமை) அவர் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடக பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

சந்தேகநபருக்கு பாதுகாப்பு வழங்குமாறு நீதிமன்றத்தால் கிடைத்த உத்தரவுக்கமையவும் சந்தேக நபரின் உயிராபத்தை கருத்திற் கொண்டும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2008, 2009 காலப்பகுதியில் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், சந்தேகநபரான சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி என்பவருக்கு அடைக்கலம் வழங்கியதாக பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment