ஆசிய காற்பந்தாட்ட சம்மேளனத்தின் அரசியலமைப்பில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் இலங்கை காற்பந்து துறையின் முன்னேற்றத்திற்கு எதுவித பாதிப்பையும் ஏற்படுத்த மாட்டாதென இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் அனுர டீ சில்வா தெரிவித்தார்.
ஆசிய சம்மேளனத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் மலேசிய தலைநகரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முக்கியமான தீர்மானங்கள் எட்டப்பட்டன. மொத்தமாக 42 நாடுகள் திருத்தங்களுக்கு அனுமதியளித்தன.
சவுதி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தென்கொரியா, உஸ்பகிஸ்தான் நாடுகள் மாத்திரம் ஆட்சேபம் தெரிவித்தன. திருத்தங்களின் பிரகாரம் காற்பந்தாட்ட விளையாட்டின் வளர்ச்சிக்காக ஆசிய சம்மேளனத்தின் மூலம் வழங்கப்படும் நிதி அடுத்த வருடம் தொடக்கம் அதிகரிக்கப்படும் என்று அனுர டீ சில்வா கூறினார்.
No comments:
Post a Comment