இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றார் - News View

About Us

About Us

Breaking

Friday, November 2, 2018

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றார்

நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மீண்டும் நியமிக்கப்பட்ட கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இன்று (02) வெள்ளிக்கிழமை தனது பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார். 

பின்னர் அமைச்சின் செயலாளர்கள், அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்ட இராஜாங்க அமைச்சர், அமைச்சின் செயற்பாடுகளை வழமைபோன்று மேற்கொள்ளுமாறு பணிப்புரை வழங்கியிருந்தார். 

அத்துடன், ஏற்கனவே இந்த அமைச்சின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களை அவ்வாறே மேற்கொள்ளுமாறும் பணிப்புரை வழங்கியிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment