மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்றத்தை விரைவில் கூட்டுவதற்கு ஆதரவு வழங்குமே தவிர பாராளுமன்றத்தில் எவருக்கும் ஆதரவு வழங்க மாட்டாதென கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நேற்று அறிவித்தார்.
இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்குமென வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தியில் உண்மையில்லையென்றும் அது முற்றிலும் பிழையானதொரு தகவல் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஊடகங்களில் வெளிவந்த செய்தியால் மக்கள் மத்தியில் தவறான செய்தி கொண்டு செல்லப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டிய விஜித ஹேரத் எம்.பி, அச்செய்தியை மறுக்கும் வகையில் விசேட செய்தி அறிக்கையொன்றை நேற்று வெளியிட்டிருந்தார்.
அதில் குறிப்பிட்ட வலைத்தளத்தில் நவம்பர் 02 ஆம் திகதியன்று இன்று காலை 10.49 மணிக்கு, 'ஜே.வி.பியின் ஆதரவு ரணிலுக்கு' என வெளிவந்த செய்தி தவறு என்றும் சபாநாயகருடனான கூட்டத்தில் கலந்துகொண்டு பாராளுமன்றத்தை விரைவில் கூட்டுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்தோமே தவிர எச்சந்தர்ப்பத்திலும் ஐ.தே.கவுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக நாம் கூறவில்லையென்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment