கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் 07வது சபை அமர்வு கடந்த 25 ஆம் திகதி ஓக்டோபர் மாதம் சபா மண்டபத்தில் தவிசாளர் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது சபையின் சிரேஷ்ட உறுப்பினர் எஸ்.ஏ.அன்வர் ஆசிரியர் ஆக்கபூர்வமான பிரேரணையொன்றினை முன்வைத்து உரையாற்றினார்.
”எமது கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேசம் 11 வட்டாரமாகப் பிரிக்கப்பட்டு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்ற வேளை எமது பிரதேச சபைக்குட்பட்ட வீதிகளுக்கான பெயர்கள் 2018 ஆண்டு வரையான காலப்பகுதிகளில் இதுவரை கெசட் பண்ணப்பட்ட வீதிகள் இருபதுள்ளது. பல வீதிகள் ஒரே பேரில் காணப்படுவதுடன், ஒரு வீதிக்கு இரு பெயரும் காணப்படுகின்றது.
இதனால் பல்வேறு அசெளகரியங்களை மக்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலைமை காணப்படுகிறது. இந்த அசெளகரியங்களைக் குறைக்க பின்வரும் நடைமுறைகளைச் செயற்படுத்துமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
01. ஒவ்வொரு வட்டாரப் பிரதிநிதிகள் தலைமையில் குழு நியமித்து வட்டாரத்தின் வீதிப் பெயர்களை ஊர்ப்பிரமுகர்களுடன் கலந்துரையாடி தீர்மானித்தல்.
02. வட்டார முகப்பில் வட்டாரத்தில் வீதிகள் அடங்கிய பட வரைபை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுத்தல்.
03. கிராம சேவகர் உதவியுடன் வீதியிலுள்ள வீடுகளுக்குரிய வீட்டிலக்கங்கள் அமைத்து ஒழுங்கு படுத்துதல்.
04. வர்த்தகக் கம்பனிகளின் உதவியுடன் வீதிக்கான பெயர்ப்பலகை பொருத்தும் பணியினை மேற்கொள்ளல்.
05. ஒவ்வொரு தடவையும் குறித்த ஒரு தொகை வீதிகளை கெசட் பண்ணுதல் என பிரதேச வீதிகளுக்கு பெயரிட பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ஏ.அன்வர் ஆசிரியரினால் சபையில் ஐந்து ஆக்கபுர்வமான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எம்.ரீ.எம்.பாரிஸ்
No comments:
Post a Comment