ஜனநாயக அரசியல் பாதிக்கப்பட்டுள்ள தற்கால வேளையில் ஜனநாயகத்தின் மீதிருக்கின்ற கொஞ்ச நஞ்ச நம்பிக்கையை யாராவது காப்பாற்றிக் கொள்ள நாம் திடசங்கற்பம் கொள்ள வேண்டும்.
இதனை அனைத்து அரசியல் தரப்புக்களும் கருத்திற் கொண்டு செயற்பட்டு ஜனநாயகத்தை நிலை நிறுத்த வேண்டும். இத்தகையதொரு உத்தரவாதத்தை தமது தலைமைக்கு அளித்துள்ள நிலையிலேயே ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்றப் பிரதிநிதிகள் கட்டுக் கோப்போடு செயற்பட்டு வருகின்றார்கள் என்பதை தெரிவிக்கின்றார் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான ZA. நஸீர் அஹமட்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய அரசியல் தளம்பல் நிலை வேண்டத்தகாத அரசியல் கலாசாரங்கள் ஏற்படுவதற்கு வழி வகுத்துள்ளது. பதவிக்காக சோரம் போகும் நிலை உருவாகியது. இது ஜனநாயக நாகரீக அரசியலை கேள்விக்குறியாக்கியுள்ளது.
இத்தகைய காலகட்டத்தில் மிக அவதானமாக நடந்து கொண்டு எமது மக்களின் கௌரவத்தையும் மாண்பையும் நாம் காப்பாற்ற வேண்டும். மக்கள் எமக்களித்துள்ள ஆணையின் பிரகாரம் நாம் செயற்பட வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
எமது உயர் அரசியல்பீடம் எடுத்த முடிவுக்கமைய நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைவரின் கரத்தைப் பலப்படுத்தி செயற்படுவதில் உறுதியாக இருக்கின்றனர்.
ஐனநாயக அரசியலை நிலை நிறுத்துவதில் இவர்களது பங்களிப்பு தலைமையோடு என்றும் ஒருமித்திருக்கும். எனினும், அவ்வப்போது முன்வைக்கப்படும் வதந்திகளையும் அர்த்தமற்ற எதிர்வு கூறல்களையும் கருத்திற்கொள்ளாது எமது மக்கள் தமது மக்கள் பிரதிநிதிகளின் கரத்தைப் பலப்படுத்தி நமது சமூகத்தின் மேன்மைக்கு உழைக்க வேண்டும் என்றார்.
எம்.எச்.எம்.இம்றான்
No comments:
Post a Comment