ஹஜ் மற்றும் உம்றா கடமைகளுக்கு அழைத்துச் செல்வதிலுள்ள பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுடன் ஹஜ் பிரயாண முகவர்கள் சங்கம் விசேட கலந்துரையாடல்! - News View

About Us

About Us

Breaking

Friday, November 30, 2018

ஹஜ் மற்றும் உம்றா கடமைகளுக்கு அழைத்துச் செல்வதிலுள்ள பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுடன் ஹஜ் பிரயாண முகவர்கள் சங்கம் விசேட கலந்துரையாடல்!

ஹஜ் மற்றும் உம்றா கடமைகளுக்காக யாத்திரிகர்களை அழைத்துச் செல்வதிலுள்ள பிரச்சினைகள் மற்றும் உம்றா கடமைக்கான விமான டிக்கட்களை பெற்றுக்கொள்வதில் உள்ள சவால்கள் குறித்தும் முஸ்லிம் அலுவல்களுக்கு பொறுப்பான நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுடன் இலங்கை ஹஜ் பிரயாண முகவர்கள் சங்கம் இன்று வெள்ளிக்கிழமை (30) விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டது.

பத்தரமுல்லை, பெலவத்தையில் அமைந்துள்ள லக்திய மெதுரவில் இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலில் யாத்திரிகர்களை அழைத்துச் செல்லும் போது விமான டிக்கட்களை பெற்றுக் கொள்வதில் ஹஜ் முகவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான மகஜர் ஒன்றும் இதன்போது அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விடம் கையளிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் இலங்கை ஹஜ் பிரயாண முகவர்கள் சங்கத்தின் தலைவரும், அம்ஜா டிரவல்ஸ் உரிமையாளருமான அல்-ஹாஜ் எச்.எம். அம்ஜடீன், உப தலைவர்களான ஸேபே டிரவல்ஸ் உரிமையாளர் அல் -ஹாஜ் பாரூக், கரீம் லங்கா டிரவல்ஸ் உரிமையாளர் அல்-ஹாஜ் ஏ.சீ.பி.எம்.கரீம் மற்றும் அமைப்பின் செயலாளரும், இக்ரா டிரவல்ஸ் உரிமையாளருமான அல்-ஹாஜ் எம்.ஓ.எவ்.ஜெஸீம் ஆகியோர் கலந்து கொண்டனர். 

எதிர்காலத்தில் ஹஜ் மற்றும் உம்றா கடமைகளை மேலும் சிறப்பாகவும் - ஆரோக்கியமாகவும் முன்னெடுக்கும் வகையில் அதிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுத் தருவதாக இதன்போது உறுதியளித்த அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், உம்றாவுக்கான விமான டிக்கட்களைப் பெற்றுக் கொள்வதில் உள்ள பிரச்சினை குறித்து இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவருடன் கலந்துரையாடி விரைவில் தீர்த்து வைப்பதாகவும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment