எரிபொருட்களின் விலைகள் ரூபா 5 இனால் மேலும் குறைக்கப்பட்டுள்ளன. பெற்றோல் ஒக்டேன் 92, 95 மற்றும் ஒட்டோ டீசல், சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலைகள் ரூபா 5 இனால் குறைக்கப்பட்டுள்ளன.
இன்று நள்ளிரவு (01) முதல் அமுலாகும் வகையில், குறித்த விலைக்குறைப்பு அமுலுக்கு வருவதாக, தொழில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர், காமினி லொக்குகே தெரிவித்தார்.
இன்று (30) பிற்பகல் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
உலக சந்தையில் எரிபொருளின் விலைகள் குறைவடைந்துள்ளதைத் தொடர்ந்து பிரதமரின் ஆலோசனைக்கு அமைய, எரிபொருளின் விலையை இவ்வாறு மேலும் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
தற்போதுள்ள அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்றதன் பின்னர் கடந்த நவம்பர் 03 ஆம் திகதி மற்றும் நவம்பர் 16 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள்களின் விலைகள் குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை பெற்றோலிய (CPC) கூட்டுத்தாபன எரிபொருள் விலைகள்
- பெற்றோல் Octane 92 - ரூபா 140 இலிருந்து ரூபா 135 ஆக ரூபா 5 இனாலும்
- பெற்றோல் Octane 95 - ரூபா 164 இலிருந்து ரூபா 159 ஆக ரூபா 5 இனாலும்
- ஒட்டோ டீசல் - ரூபா 111 இலிருந்து ரூபா 106 ஆக ரூபா 5 இனாலும்
- சுப்பர் டீசல் - ரூபா 136 இலிருந்து ரூபா 131 ஆக ரூபா 5 இனாலும் குறைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment