வாழைச்சேனைப் பிரதேச செயலகத்தில் கலாசார விழா - News View

About Us

About Us

Breaking

Friday, November 30, 2018

வாழைச்சேனைப் பிரதேச செயலகத்தில் கலாசார விழா

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக கலாசார அதிகார சபையும் பிரதேச கலாசாரப்பேரவையும் இணைந்து நடாத்திய பிரதேச இலக்கிய விழா பேத்தாழை குகனேசன் கலாசார மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கோறளைப்பற்று செயலக கலாசார அதிகார சபை மற்றும் பிரதேச கலாசார பேரவைத்தலைவரும் பிரதேச செயலாளருமான வ.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
மேலும் அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட கலாசார உத்தியோகத்தர் எம்.ஏ.சி.ஜெயினுலாப்தீன், வாழைச்சேனை பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் திருமதி.நிருபா பிருந்தன், செயலக கணக்காளர் திருமதி.டிலானி ரேவதன், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சிவநேசராஜா, செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச கலைஞர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் போது பிரதேச செயலக கலாசார அதிகார சபையினால் முதலாவது மலராக புதிய மழை நூலும், பிரதேச கலாசாரப்பேரவையால் பதினான்காவது தடவையாக இளம்பரிதி நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது. இதன் முதல் பிரதியை பிரதேச செயலாளர் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருக்கு வழங்கி வைத்தார்.
மேலும், பிரதேச இலக்கிய விழாவினை முன்னிட்டு மாணவர்களிடத்தில் நடாத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், பிரதேச மூத்த எழுத்தாளர்களுக்கு நினைவுப்பரிசில்கள் வழங்கப்பட்டது.

அத்துடன், பிரதேச மூத்த கலைஞர்கள் மூவரும் இளம் கலைஞரும் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், மாணவர்களின் கிராமிய நடனம், பரதம், நாட்டார் பாடல் எனும் கலை நிகழ்வுகள் இடம்பெற்றது.

எஸ்.எம்.எம்.முர்ஷித்

No comments:

Post a Comment