லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபா நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று மீண்டும் (30) நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இது தொடர்பான மனு சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று (30) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இன்று லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் நிதி கட்டுப்பாட்டாளராக கடமையாற்றிய முதித தமானகமவிடம் சாட்சி விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது பிரதிவாதிகள் சார்பில் முன்னின்ற ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி எழுப்பிய குறுக்கு கேள்விக்கு பதிலளித்த சாட்சிக்காரரான முதித தமானகம, கடந்த ஜூலை மாதம் தம்பர அமில தேரருக்கு லிட்ரோ கேஸ் நிறுவனம் 95,000 ரூபா பணம் வழங்கியதற்கான பற்றுச்சீட்டை வௌியிட்டார்.
மேலும் தொடர்ந்த குறுக்கு விசாரணையின் போது, வழக்கின் முதன்மை பிரதிவாதியான காமினி செனரத் லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவராக செயற்பட்ட காலத்தில் எந்தவித சம்பளக் கொடுப்பனவுகளையும் பெறவில்லை என்று சாட்சிக்காரரான முதித தமானகம தெரிவித்தார். இதன் மேலதிக விசாரணைகள் எதிர்வரும் 07ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment