மாலைத்தீவிலிருந்து சட்ட விரோதமான முறையில் தங்க நகைகளை நாட்டுக்கு கொண்டுவந்த இருவர், கட்டுநாயக்க சுங்கப்பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் கொழும்பு பகுதியை சேர்ந்த (30 வயது) ஒருவரும் மாலைத்தீவு பிரஜை ஒருவரும் (46 வயது) கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாலைத்தீவில் இருந்து நேற்று (வியாழக்கிழமை) இரவு வருகை தந்த EK 652 விமானத்தின் ஊடாக சந்தேகநபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை நேற்று வந்தடைந்துள்ளனர்.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து 3,148,810 ரூபாய் பெறுமதியான 233 கிராம் எடையுடைய தங்க பிஸ்கட்கள் இரண்டும், தங்க மாலைகள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment