அரசாங்கத்திற்கு எதிர்த்தரப்பினரது ஆதரவு தேவையில்லை, இடைப்பட்ட காலத்தில் மீண்டும் ஒரு ஆட்சி மாற்றம் இடம்பெறாது : வாசுதேவ - News View

About Us

About Us

Breaking

Friday, November 30, 2018

அரசாங்கத்திற்கு எதிர்த்தரப்பினரது ஆதரவு தேவையில்லை, இடைப்பட்ட காலத்தில் மீண்டும் ஒரு ஆட்சி மாற்றம் இடம்பெறாது : வாசுதேவ

அரசாங்கத்திற்கு எதிர்த்தரப்பினரது ஆதரவு ஒருபோதும் தேவையில்லை. எமக்குத் தேவையான விடயங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்ள முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயகார தெரிவித்தார்.

நாட்டினது அரசியல் குழப்பநிலை தொடர்பில் இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “தற்போது நாடாளுமன்றம் எதிர்த்தரப்பினரது பொழுதை கழிக்கும் ஒரு இடமாகவே காணப்படுகின்றது. எதிர்த்தரப்பினர் அரசாங்கத்தை முதலில் ஏற்றுக்கொண்டால் மட்டுமே நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்து நிறைவேற்ற முடியும்.

எமது அரசாங்கத்திற்கு எதிர்த்தரப்பினரது ஆதரவு ஒருபோதும் தேவையில்லை. எங்களுக்குத் தேவையான விடயங்களை முறையாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்வோம். இடைப்பட்ட காலத்தில் மீண்டும் ஒரு ஆட்சி மாற்றம் இடம்பெறாது.

கடந்த காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகத்தில் பாரிய குறைப்பாடுகள் காணப்பட்டன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2015 ஆம் ஆண்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியினை இடைப்பட்ட காலத்தில் நிறைவேற்றவே ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தினார்.

இனிமேல் மஹிந்த தலைமையிலான இடைப்பட்ட அரசாங்கமே தொடரும் இதில் எவ்வித மாற்றமும் கிடையாது” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment