நியூயோர்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடருடன் இணைந்ததாக உலக சுகாதார நிறுவனத்தினால் (28) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதைப்பொருட்கள், தொற்றா நோய்கள் மற்றும் பேண்தகு அபிவிருத்தி பற்றிய மாநாட்டில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் அங்கு பிரகடனமொன்றை முன்வைத்தார்.
இப்பிரகடனத்தை ஜனாதிபதியின் சார்பாக மாநகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க சபையில் முன்வைத்தார்.
மதுபானங்களை கட்டுப்படுத்துவதற்கான சர்வதேச பிரகடனம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கும் இலங்கை ஆதரவு வழங்குமென அப்பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் மதுபானம் மற்றும் புகையிலை தொடர்பான தேசிய நிறுவனமொன்றை ஸ்தாபித்தல்இ மதுபான விளம்பரங்களை தடை செய்தல் போன்ற இலங்கையினால் ஏற்கனவே மதுபானங்களை தடைசெய்வதற்காக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாகவும் இதில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கையில் அடுத்த வருடம் இடம்பெறவுள்ள சர்வதேச மதுபானக் கொள்கைகள் பற்றிய மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதி சகல சர்வதேச பிரதிநிதிகளுக்கும் வேண்டுகோள் விடுத்தார்.
மாநாட்டில் உரையாற்றிய எஸ்டோனியா நாட்டின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி அவர்களால் முன்வைக்கப்பட்ட பிரகடனம் தொடர்பில் பாராட்டு தெரிவித்ததுடன்இ முழு உலகிற்கும் முன்னுதாரணமாக அமையக்கூடிய அத்தகைய பிரகடனமொன்றை முன்வைத்தமை தொடர்பாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு தனது நன்றியையும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment