ஏறாவூர் பொதுச்சந்தை நிர்மாணப்பணிகளைத் துரிதப்படுத்த்துமாறு கோரி அமைச்சர் றவூப் ஹக்கீமை நேரடியாகச் சந்திக்கவுள்ளோம் - முதல்வர் அப்துல் வாஸித் - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 3, 2018

ஏறாவூர் பொதுச்சந்தை நிர்மாணப்பணிகளைத் துரிதப்படுத்த்துமாறு கோரி அமைச்சர் றவூப் ஹக்கீமை நேரடியாகச் சந்திக்கவுள்ளோம் - முதல்வர் அப்துல் வாஸித்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல சமூகங்களும் ஒன்று சேரும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த, இலாபகரமான பொதுச்சந்தை எனப்பெயர் பெற்ற ஏறாவூர் பொதுச்சந்தை நிர்மாணப் பணிகளைத் துரிதப்படுத்தித்தருமாறு கோரி அமைச்சர் றவூப் ஹக்கீமிடம் நேரடியாகச்செல்லத் தீர்மானமெடுத்திருப்பதாக ஏறாவூர் நகர முதல்வர் றம்ழான் அப்துல் வாஸித் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஏறாவூர் நகர சபையில் திங்கட்கிழமை மாலை 01.10.2018 இடம்பெற்ற ஏறாவூர் நகர வர்த்தகர்களுடனான சந்திப்பில் அவர் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்துத்தெரிவித்த நகர மேயர், கடந்த சபை அமர்விலே எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி எதுவித கட்சி இன, மத பேதங்களின்றி ஏறாவூர் நகர சபையின் அனைத்து உறுப்பினர்களும் நகரத்திட்டமிடல் அபிவிருத்தி அமைச்சர் றவூப் ஹக்கீமிடம் ஏறாவூர் நகர பொதுச்சந்தை நிருமாணத்தைத் துரிதப்டுத்துமாறு கோரி நேரடியாகச்சென்று வேண்டுகோளை முன்வைப்பதென்று தீர்மானமெடுத்துள்ளோம்.
ஏனென்றால், கடந்த கால யுத்தத்தினாலும் இயற்கை, செயற்கை அழிவுகளினாலும் பாதிக்கப்பட்ட நிலையிலும் ஏறாவூர் நகர வர்த்தகர்கள் குறிப்பாக, சந்தை வியாபாரிகள் அத்தனை கஷ்டங்களையும் தாங்கிப்பிடித்து தமது வியாபார நடவடிக்கைகளைத் தொடர்ந்திருந்தார்கள்.

ஆனாலும், பன்னெடுங்காலமாக எதுவித போதிய வசதி வாய்ப்புக்களுமில்லாது, பல குறைபாடுகளுடன் பொதுச்சந்தையாக இயங்கிய நிலையில் அதனை நவீன சந்தையாக நிருமாணிக்கும் திட்டம் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட்டின் அயராத முயிற்சியினால் தொடங்கப்பட்டு வேலைகள் மும்முரமாக இடம்பெற்று வந்தன.

ஆயினும், நிருமாணப்பணிகள் துவங்கி சுமார் ஒரு வருட காலம் நிறைவுற்றுள்ள தற்போதைய நிலையிலும் பொதுச்சந்தை நிருமாணப்பணிகள் மந்த கதியை அடைந்துள்ளன. இதனால், ஏறாவூர் நகர பொதுச்சந்தை வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.‪ எனவே, இந்த விடயத்தை அமைச்சர் சீர்தூக்கிப் பார்க்க வேண்டுமென நாங்கள் கருதுகின்றோம்.

அமைச்சர் கல்முனை மாநகர சபை அபிவிருத்தி வேலைகளை மேற்கொள்வதற்காக அச்சபைக்கு 3200 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்து உள்ளூராட்சி மன்ற நிருவாகத்தைப் பயனுறுதிமிக்கதாக்க உதவியுள்ளார்.
அதே போல, பல வகையிலும் பாதிக்கப்பட்ட எறாவூர் நகர பிரதேச அபிவிருத்திக்காக ஏறாவூர் நகர சபைக்கு அபிவிருத்திக்கான செயற்றிட்டங்களுக்காக நிதியொதுக்கீடு செய்து தருவதை நாம் எதிர்பார்க்கின்றோம். ஏறாவூர் நகர அபிவிருத்திக்காகவும் ஏறாவூர் நகர சபையிடம் அபிவிருத்தித்திட்டங்கள் உள்ளன. அதில் பிரதானமானது, ஏறாவூர் நகர பொதுச்சந்தை அபிவிருத்தியாகும்.

வரும் பருவ மழை காலத்திற்கு முன்னராகவே பொதுச்சந்தை நிருமாணப்பணிகளை முடிந்தளவு பூர்த்தி செய்து அதனை பொதுச்சந்தை வியாபாரிகளிடம் கையளிக்க நடவடிக்கையெடுக்குமாறு வலியுறுத்த விருக்கின்றோம்.

ஏறாவூர் நகர நவீன பொதுச்சந்தையின் நிருமாணப்பணிகள் சுமார் 193 மில்லியன் ரூபாய்கள் செலவு மதிப்பீட்டில் தொடங்கப்பட்டதாகவும், இதில் ஏற்கனவே 100 மில்லியன் ரூபாவுக்கான வேலைகள் நிறைவடைந்துள்ளன. இலங்கைப் பொறியியல் கூட்டுத்தாபனம் இந்த நிருமாணப்பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

No comments:

Post a Comment