இரத்தினபுரி மாவட்டத்தின் ஒரு சில பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் சுமார் 75 மில்லி மீற்றர் வரையான அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளமையினால், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால், குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேசிய கட்டட ஆராய்ச்சி மையத்தின் அறிக்கைக்கு அமைய இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம, பலாங்கொடை, இம்புல்பே, களவானை, நிவித்திகலை, எலபாத்த, இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு முற்கூட்டிய மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் மழை தொடர்ச்சியாக பெய்யுமாயின், குறித்த பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளிலும் மண்சரிவு, பாறைகள் வீழ்தல், நில இறக்கம் போன்ற அனர்த்தங்கள் நிகழலாம் என, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment