கடந்த சில நாட்களாக பிரதேச குப்பைகளை அகற்றுவதில் ஏற்பட்ட இழுபறி நிலை, பல்வேறு விமர்சனங்களையும் சிக்கல்களையும் தோற்றுவித்திருந்ததுடன், இதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், முன்னெடுப்புகள் சுமூகமான தீர்வை எட்டியுள்ளது.
மட்டு மாவட்டத்தின், கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் கே.எல்.இப்றாஹீம் (அஸ்மி) குப்பைகளை அகற்றுவது தொடர்பில் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டிருந்ததுடன், தவிசாளர் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத்தொடர்பு கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதேச அபிவிருத்திக் கூட்டங்களிலும் இது தொடர்பில் ஆராய்ந்து தீர்க்கமான முடிவொன்றை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்திருந்தார்.
மேற்படி விடயம் தொடர்பில் உடனடியாக கவனஞ்செலுத்தி இப்பிரதேசத்தில் தேங்கிக்கிடக்கும் குப்பைகளை அகற்றி, பாரிய நோய்களிலிருந்து மக்களைப்பாதுக்காக நடவடிக்கை மேற்கொண்ட கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் திருமதி ஷோபா ஜெயரஞ்சித் அவர்களுக்கு தனது மனப்பூர்வமான நன்றிகளை பிரதேச சபை உறுப்பினர் அஸ்மி தெவித்துள்ளார்.
நேற்று (02.10.2018) ஆரம்பித்த குப்பை அகற்றல் பணியை முதன் முதலாக எனது வட்டாரமான செம்மண்ணோடை-மாவடிச்சேனைப் பிரதேசத்தலிருந்து ஆரம்பித்து இப்பிரதேச மக்களின் சுகாரத்தைப்பேண உதவியமைக்காக இப்பிரதேச மக்களின் பிரதிநிதி என்ற வகையில் மக்கள் சார்பாகவும் இப்பிரதேச வர்த்தகர்கள் சார்பாகவும் மனப்பூர்வமான நன்றிகள் உரித்தாகட்டும் என பிரதேச சபை உறுப்பினர் அஸ்மி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் இப்பிரதேச மக்கள் பெரிதும் நன்மையடைவதுடன், இதனால் ஏற்படும் சுகாதாரச்சீர்கேடுகள் முற்றாக இல்லாமலாக்கப்படும், அத்துடன், இனி வருங்காலங்களில் குப்பைகளை தரம் பிரித்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதற்காக பிரதேச மக்கள் தமது பூரண ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டுமென்பதுடன், சகல விடயங்களுக்கும் சபையை நம்பி இருக்காமலும் விமர்சனங்களைச் செய்யாமலும் இது நம் பிரதேசம். நாமே சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதற்கான முயற்சிகளை ஒத்துழைப்புக்களை மக்களும் வழங்க முன்வர வேண்டுமென பிரதேச சபை உறுப்பினர் அஸ்மி மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.
என்.எம்.அஸ்கர் அலி
No comments:
Post a Comment