கல்விசார் அபிவிருத்திகளில் கல்வித்திணைக்களத்தினர் ஒத்துழைக்க வேண்டும் - பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 3, 2018

கல்விசார் அபிவிருத்திகளில் கல்வித்திணைக்களத்தினர் ஒத்துழைக்க வேண்டும் - பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா

கல்வித்திணைக்களத்தினர் கல்வித்துறைசார்ந்து பாடசாலைகளில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பது மிகவும் முக்கியமானதென தேசிய நல்லிணக்கம் ஒருமைப்பாட்டு மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளபபட்டு வருகின்ற அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை (02) மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணியமூர்த்தி தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட தேசிய நல்லிணக்கம் ஒருமைப்பாட்டு மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா தெரிவித்தார்.

மேலும் கருத்துத்தெரிவித்த அவர், தேசிய நல்லிணககம் மற்றும் ஒருமைப்பாட்டு சார்ந்து பல்வேறு வேலைத்திட்டங்களை எமது அமைச்சு முன்னெடுத்து வருகிறது. விசேடமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு அதிக கரிசனையைச்செலுத்தும் வகையிலான திட்டங்கள் எமது அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தேசிய நல்லிணக்கத்தினைக் கட்டியெழுப்புவதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பதன் மூலம் நாட்டினை மென்மேலும் முன்நோக்கி கொண்டு செல்ல முடியும்.

பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பில் தொடர்ந்தும் முறைப்பாடுகள் கிடைத்த வண்ண்மிருக்கினறன. எனவே, கல்வித்திணைக்கள அதிகாரிகள் அபிவிருத்தித்திட்டங்கள் குறித்து கவனஞ்செலுத்த வேண்டுமென்பதுடன், மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களுடன் இணைந்து செயற்படுவதன் மூலம் மாவட்டத்தின் அபிவிருத்திக்கு ஆதரவுகளை வழங்கவும் வேண்டுமெனத்தெரிவித்தார்.

இன்றைய முன்னேற்ற மீளாய்வுக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒதுக்கீடுகள், அமைச்சுகளின் ஒதுக்கீடுகள், ஜனாதிபதியின் விசேட வேலைத்திட்டங்களூடாக நிதிகள் வழங்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.

இதில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந்த், உதவி மாவட்டச்செயலாளர் ஏ.நவேஸ்வரன், மாவட்ட பிரதம கணக்காளர் எஸ்.ஜெகதீஸ்வரன், பிரதேச செயலாளர்கள், பிரதித்திட்டமிடல் பணிப்பாளர்கள், உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள், கணக்காளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment