வாழைச்சேனை கடதாசி ஆலைக்கு பிரதி அமைச்சர் புத்திக பத்திரன விஜயம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 3, 2018

வாழைச்சேனை கடதாசி ஆலைக்கு பிரதி அமைச்சர் புத்திக பத்திரன விஜயம்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாழைச்சேனை கடதாசி ஆலை புனரமைப்புச் செய்வதற்கான அங்கீகாரத்திற்காக இவ்வருடம் டிசம்பர் மாதம் வழங்குவதற்காக பத்திரங்கள் தயாரிக்கப்படுவதாக வர்த்தக வாணிப பிரதியமைச்சர் புத்திக பத்திரன தெரிவித்தார்.

இன்று (03) புதன்கிழமை மாலை வாழைச்சேனை கடதாசி ஆலைக்கு விஜயம் மேற்கொண்ட பிரதியமைச்சர் கடதாசி ஆலையைப் பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவிக்கும் போதே மேற் சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத்தெரிவிக்கையில், எம்பிலிப்பிட்டடிய கடதாசி ஆலையை கொரிய நாட்டு நிறுவனத்துடன் அரசாங்கமும் இணைந்து நூற்றி இருபது கோடி ரூபா செலவில் புணர்நிர்மானம் செய்வதற்கு திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, அமைச்சரவை அங்கீகாரத்திற்காக எதிர்வரும் வாரங்களில் அமைச்சரவைக்குச் சமர்பிக்கப்படவுள்ளது.
அதன் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் வாழைச்சேனை கடதாசி ஆலையை வெளிநாட்டு நிறுவனமொன்றுடன் இணைந்து புணர்நிர்மானம் செய்வதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு இவ்வருடம் டிசம்பர் மாதம் அமைச்சரவை அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படுமென்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், ஐக்கிய தேசியக்கட்சியின் கல்குடா அமைப்பாளர் எல்.ரீ.எம்.புர்கான், வர்த்தக வாணிப அமைச்சின் உயரதிகாரிகளும் கடதாசி ஆலையின் நிருவாகிகளும் கலந்து கொண்டனர்.

எஸ்.எம்.எம். முர்ஷித்

No comments:

Post a Comment