சர்வதேச சுற்றுலா ஆராய்ச்சி மாநாடு கொழும்பில் ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 4, 2018

சர்வதேச சுற்றுலா ஆராய்ச்சி மாநாடு கொழும்பில் ஆரம்பம்

சர்வதேச சுற்றுலா ஆராய்ச்சி மாநாடு மற்றும் சுற்றுலா தலைவர்கள் மாநாடு கொழும்பு பல்கலைக்கழக சுற்றுலாத்துறை கலாநிதி சுரங்க சில்வா தலைமையில் இன்று (04) ஆரம்பமானது. 

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் பிரிவினால் ஏற்பாடுசெய்யப்பட்ட இந்த நிகழ்வு இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது. 

கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் கலாநிதி விமலரத்ன தேரர் இந்த நிகழ்வில் உரையாற்றுகையில் , இலங்கை ஓர் சிறிய நாடு. மாங்கனியை போன்ற வடிவை கொண்டது. அதேபோல் சுவையும் கொண்டதால் சுற்றுலாத்துறையினர் இலங்கைக்கு வருகின்றனர் என்று தெரிவித்தார். 

தொடர்ந்து இங்கு உரையாற்றிய ஹொங் கொங் நாட்டை சேர்ந்த சுற்றுலா பொருளாதாரம் மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவ பேராசிரியர் கலாநிதி பிறைன் கிங் உரையாற்றுகையில் இலங்கை ஓர் அழகான நாடு இதனை கண்டுகளிப்பதற்காகவே சுற்றுலாத்துறையினர் இங்கு வருகின்றனர் என்று குறிப்பிட்டார். 

இதனுடன் தொடர்புடையதாக கடந்த 2 ஆம் திகதி குருநாகல் ரிதிவிகாரையில் முதற்தடவையாக பௌத்த சுற்றுலா மாநாடு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

இந்த நிகழ்வில் அமெரிக்கா, லண்டன், சீனா, யப்பான், கொரியா, போர்த்துக்கல், இந்தியா, பங்களாதேஷ், இந்தோனேசியா, தாய்வான், நெதர்லாந்து, அவுஸ்ரேலியா, ஹொங்கொங் போன்ற நாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment