புத்தளம் – அருவைக்காடு மக்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஐ.நா அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.
ஐக்கிய நாடுகளின் கொழும்பு அலுவலகப் பிரதிநிதிகள் சிலர் புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு சென்று சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுவரும் மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இதேவேளை, கொழும்பில் இருந்து குப்பைகளை புத்தளத்திற்கு கொண்டு வர வேண்டாம் என வலியுறுத்தி சத்தியாக்கிரகத்தில் ஈடுபடும் மக்கள் இன்று (03) பேரணியாகச் சென்று கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன், ஐ.நா பிரதிநிதிகளின் வாகனைத்தையும் மறித்து இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமது பகுதியில் குப்பைகளைக் கொட்ட வேண்டாம் என வலியுறுத்தி மக்கள் நான்காவது நாளாக சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, வேறு ஒரு நிகழ்வில் கலந்து கொண்டுவிட்டு சென்று கொண்டிருந்த போது தமது அதிகாரிகளை புத்தளத்தில் மக்கள் சந்தித்துக் கலந்துரையாடியதாக ஐ.நா அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சந்திப்பொன்று ஏற்கனவே திட்டமிடப்பட்டிருக்கவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment