துப்பாக்கியுடன் அமைதியின்மையை ஏற்படுத்தியதற்காக தெபுவன பொலிஸ் சார்ஜனுக்கு விளக்கமறியல் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 4, 2018

துப்பாக்கியுடன் அமைதியின்மையை ஏற்படுத்தியதற்காக தெபுவன பொலிஸ் சார்ஜனுக்கு விளக்கமறியல்

அநாகரீகமான முறையில் நடந்துகொண்ட தெபுவான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

அவரை எதிர்வரும் 09ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மத்துகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். 

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவதாகக் கூறி தன்னால் கைது செய்யப்பட்ட நபர் ஒருவரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விடுதலை செய்தமைக்கு எதிராக குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தெபுவான சந்தியில் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தார். 

தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியுடன் தெபுவான சந்தியில் தன்னைத் தானே சுட்டுக் கொள்வதாக அச்சுறுத்தி வந்துள்ளார். 

இதனையடுத்து சுமார் இரண்டு மணித்தியால போராட்டத்தின் பின்னர் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மடக்கிப் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். 

இதன்போது, அவர் கையில் வைத்திருந்த துப்பாக்கி செயற்பட்ட போதிலும் அதனால் யாருக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை.

மணல் அகழ்வ சம்பந்தமாக கைது செய்யப்பட்டவரிடம் சட்ட ரீதியான அனுமதிப்பத்திரம் இருந்ததால் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விடுவித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் நடந்துகொண்ட விதம் தவறானது என இன்று (04) நீதிமன்றத்தில் பொலிஸ் சார்ஜன் சார்பில் ஆஜரான சட்டத்தரணி குறிப்பிட்டார்.

இந்த விடயத்தில் நீதியை எதிர்பார்த்து, பொலிஸ் சார்ஜனின் குடும்பத்தினர் களுத்தரை உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு இன்று (04) சென்றிருந்தனர்.

இந்நிலையில் வீதியில் அநாகரீகமான முறையில் நடந்துகொண்டதல் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு நேற்று (03) அறிவித்தது.

No comments:

Post a Comment