சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபாலவிற்கு அத்தகையதொரு பதவியை வகிப்பதற்கு உள்ள தகைமை என்ன என சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிறைவேற்றதிகாரி டேவ் ரிச்சட்சனுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினரான திலங்க சுமதிபால, பிரபல வர்த்தகர் என்பதுடன் அவர் விளையாட்டு உபகரண விற்பனை, பத்திரிகை நிறுவனமொன்றின் உரிமை மற்றும் சூதாட்ட நிலையமொன்றை நடத்திச் செல்வதாகவும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமது குடும் வர்த்தக செயற்பாடுகளினூடாக நேரடியாகவும் மறைமுகமாகவும் அவர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் அவர் பதவி வகிப்பது தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவை திருப்தியடைகின்றதா என இலங்கை பாராளுமன்றத்தின் உறுப்பினர் மற்றும் நல்லாட்சி அரசாங்கத்தின் மேம்பாட்டாளர் என்ற வகையில், சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் வினவ விரும்புவதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைத் தவிர, 2016 ஆம் ஆண்டு கிரிக்கெட் தேர்தலில் போட்டியிடுவதற்கு, சர்வதேச கிரிக்கெட் பேரவை அனுமதி வழங்கியதா எனவும் ரஞ்சன் ராமநாயக்க தமது கடிதத்தில் வினவியுள்ளார்.
No comments:
Post a Comment