பிரபல சிங்களப் பாடகரும் நடிகருமான ரொனி லீச் தனது 65 ஆவது வயதில் நேற்று (01) காலமானார். அவுஸ்திரேலியாவிற்கு இசைச்சுற்றுலா ஒன்றினை மேற்கொண்டிருந்த அவர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.
தமது நகைச்சுவை மூலம் ரசிக உள்ளங்களைக் கவர்ந்த ரொனி லீச், சிங்கள இசைத்துறையில் மட்டுமன்றி தமிழ்ப்பேசும் மக்களின் பேரபிமானத்தையும் பெற்றவர்.
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு மீண்டும் நாடு திரும்ப இருந்த வேளையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து அவரை, அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அழைத்துச் சென்ற சந்தர்ப்பத்திலேயே அவர் உயிரிழந்துள்ளதாக இலங்கை பாடகர்கள் சங்கத்தின் தலைவர் கீர்த்தி பெஸ்குவல் தெரிவித்துள்ளார்.
அவரின் பூதவுடலை தாய் நாட்டிற்கு எடுத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவருடைய இறுதிக் கிரியைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment