பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் இக்ரம் உல் ஹக் உடனான உயர்மட்ட தூதுக்குழு நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டு இன்று (02 ஆம் திகதி) கொழும்புக்கு வருகை தருகின்றனர்.
இலங்கை - பாகிஸ்தான் ஆயுதப்படைகளின் பாதுகாப்புக் கலந்துரையாடலில் பங்குபற்றுவதற்காக இலங்கைக்கு விஜயம் செய்கின்ற இவர் தலைமையிலான குழுவினர் எதிர்வரும் 05 ஆம் திகதி வரை கொழும்பில் தங்கி இருப்பார்.
இவ்விஜயத்தில் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கபில வைத்தியரத்னவுடன் தொழில் வாண்மை நலன்கள் குறித்த விடயங்கள் குறித்து கலந்துரையாடவுள்ள இவர், பாதுகாப்புப் படைகளின் பிரதானி அட்மிரல் விஜேகுணரத்ன மற்றும் முப்படைகளின் தளபதிகளோடும் சந்திப்புகளை நடாத்த உள்ளார்.
இலங்கை - பாகிஸ்தானுக்கிடையிலான பாதுகாப்பு உறவானது பிராந்திய சமாதானம், பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை என்பவற்றைப் பேணுவதன் நிமித்தம் பரஸ்பர நம்பிக்கை மற்றும் பொது நலன்களை அடிப்படையாகக் கொண்டமைந்துள்ளது.
இக்கலந்துரையாடல் இரு ஆயுதப்படைகளுக்கிடையிலான தொழில்சார் மற்றும் பரஸ்பர நன்மைகளை விருத்தி செய்வதினை இலக்காகக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment