விவசாயிகள் தமக்கு ஏற்பட்டுள்ள பயிர்ச் சேதங்கள் தொடர்பாக அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம் - News View

About Us

About Us

Breaking

Monday, October 1, 2018

விவசாயிகள் தமக்கு ஏற்பட்டுள்ள பயிர்ச் சேதங்கள் தொடர்பாக அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம்

விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து விவசாயிகளிடமிருந்து நேரடியாக தகவல்களைப் பெற்றுக் கொள்ள விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர அமைச்சின் செயலாளர் பி.விஜேரத்னவைப் பணித்துள்ளார்.

இதற்கமைய, விவசாயிகள் தமக்கு ஏற்பட்டுள்ள பயிர்ச் சேதங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் அமைச்சிற்கு எழுத்து மூலம் அறிவிக்க முடியும். 011 2872094 என்ற இலக்கத்தின் வாயிலாக தொலைநகல் அல்லது தொலைபேசி மூலம் தகவல்களை வழங்க முடியும்.

இலங்கையில் செய்கை பண்ணப்படும் பயிர்களில் 30 சதவீதத்திற்கும் 35 சதவீதத்திற்கும் இடைப்பட்ட அளவு மழை மற்றும் விலங்குகளால் பாதிப்புக்கு உள்ளாவதாக விவசாய அமைச்சு மேற்கொண்ட ஆய்விலிருந்து தெரியவந்துள்ளது.

வனவிலங்குகளால் ஏற்படும் சேதங்கள் காரணமாக வருடாந்தம் நாட்டில் சுமார் 1800 கோடி ரூபா பெறுமதியான பயிர்கள் சேதத்திற்கு உள்ளாவதாக சீன ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment