தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 05ம் திகதி வௌியாகவுள்ளன - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 3, 2018

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 05ம் திகதி வௌியாகவுள்ளன

2018ம் ஆண்டுக்கானதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நாளை மறுதினம் (05) வௌியிடப்படவுள்ளன.

நாளை மறுதினம் பெறுபேறுகள் இணையத்தளத்தில் வௌியிடப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ. பூஜித தெரிவித்தார். இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 3,55,326 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

இந்நிலையில், நாளை மறுதினம் பரீட்சை பெறுபேறுகளை வௌியிடுவதற்கான நடவடிக்கைகளை பரீட்சைகள் திணைக்களம் மேற்கொண்டுள்ளதாக பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ். பிரணவதாசன் நியூஸ்ஃபெஸ்ட்டிற்குத் தெரிவித்தார்.

இதேவேளை, இம்முறை கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகளுக்கான செயன்முறை பரீட்சைகள் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


2018ம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நாளை மறு

No comments:

Post a Comment