பலத்த மழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 05 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் ஒரு செக்கனுக்கு 200 கனஅடி கொள்ளளவு நீர் வௌியேற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கொத்மலை ஆற்றை அண்மித்து வாழ்வோர் அவதானமாக செயற்பட வேண்டுமென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் மேல், வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் 150 மில்லிமீட்டர் வரை மழை வீழ்ச்சி பதிவாகக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் 100 மில்லிமீட்டர் வரை பலத்த மழை பெய்யக்கூடுமெனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
No comments:
Post a Comment