மட்டக்களப்பு மாவட்டத்தின், கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் வாகனேரி கிராம சேவகர் பகுதியில் வயல் பிரதேசத்தில் யானைகளின் அட்டகாசத்தால் வயல் காவலாளியின் குடிசை சேதமாக்கப்பட்டதுடன் காவலாளி உயிர் தப்பிய சம்பம் இன்று (ஞாயிற்றுக்கிழமை - 02) அதிகாலை இடம் பெற்றுள்ளது.
வாகனேரி கிராம சேவகர் பிரிவில் முள்ளிவட்டவான் - செட்டிடசேனை வயல் பிரதேசத்தில் இன்று அதிகாலை பிரவேசித்த யானைகள் அப்பகுதியில் வயல் காவலாளி தங்குவதற்கு அமைக்கப்பட்டிருந்த குடிசையை தகர்த்துள்ளதுடன் அங்கிருந்த சமையல் பாத்திரங்களையும் சேதப்படுத்தியுள்ளது.
வயல் காவலாளி யானைகளின் வருகையை கண்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக காவலாளி தெரிவித்ததுடன் மூன்று யானைகள் வந்ததாகவும் குடிசையை சேதப்படுத்தியதாகவும் அதற்கான உணவுகளை குடிசைக்குள் தேடியே குடிசையை சேதப்படுத்தியிருக்கும் என்றும் காவலாளி தெரிவித்தார்.
எஸ்.எம்.எம். முர்ஷித்
No comments:
Post a Comment