ஒன்றிணைந்த எதிரணியின் ‘ஜனபலய’ அரச எதிர்ப்பு போராட்டம் நடத்தப்படும் இடம், தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி போராட்டத்தை கொழும்பு லேக்ஹவுஸ் சுற்றுவட்டாரப் பகுதியில் முன்னெடுக்க ஒன்றிணைந்த எதிரணியினர் தீர்மானித்துள்ளனர்.
பிற்பகல் 3.00 மணிக்கு கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ இணைந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 02.00 மணிக்கு மக்கள் பலம் கொழும்புக்கு எதிர்ப்பு பேரணி ஆரம்பமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டு எதிரக்கட்சியின் கட்சித் தலைவர்கள் மற்றும் எதிர்ப்பு பேரணி ஏற்பாட்டாளர்கள்கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment