கூட்டு எதிர்க்கட்சியினர் ஒழுங்கு செய்துள்ள ´மக்கள் பலம் கொழும்புக்கு´ எதிர்ப்பு பேரணிக்காக பல பகுதிகளில் இருந்திம் வருகை தரும் மக்கள் கொழும்பு லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்திற்கு அருகில் ஒன்று கூடவுள்ளனர்.
பிற்பகல் 3.00 மணிக்கு கொழும்பு புறக்கோட்டை, அரமர சந்திப் பகுதியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் இந்த பேரணியில் இணைந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரணியில் கலந்து கொள்வதற்காக ஆமர் வீதி, டெக்னிகல் சந்தி, ஒல்கோட் மாவத்தை ஊடாக சில மாவட்ட மக்கள் லேக் ஹவுஸ் சுற்றுவட்டம் வரை மக்கள் பேரணியாக வருகை தர உள்ளனர்.
மேலும் சிலர் மருதானை, டீ.ஆர். விஜேவர்தன மாவத்தை ஊடாகவும், சிலர் கொம்பனிவீதி ஊடாகவும் லேக் ஹவுஸ் சுற்றுவட்டம் வரை நடை பயணமாக வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மாகாண ரீதியாக பிரிந்து 06 ஊர்வலங்களாக லேக் ஹவுஸ் சுற்றுவட்டப் பகுதியில் ஒன்று கூட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment