தூர சேவையில் ஈடுபடும் பஸ்களில் ஒன்லைன் ஊடாக ஆசனங்களை முற்பதிவு செய்யும் வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.
ஒக்டோபர் முதலாம் திகதி முதல் இந்த வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என தேசிய போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
35 மார்க்கங்களுக்கு இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் எம்.ஏ.பி. ஹேமச்சந்திர குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பஸ் கட்டணத்திற்கும் மேலதிகமாக 30 ரூபா கட்டணம் அறவிடப்படவுள்ளது. இது தொடர்பிலான மேலதிகத் தகவல்களை WWW.NTC BOOKING.LK என்ற இணையத்தளத்தினூடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment